கால்பந்து திருவிழா 2010

உலகிலேயே அதிக ரசிகர்களைக் கொண்ட உலகக்கோப்பை கால்பந்து திருவிழா கோலாகலமாக தென்னாப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இந்த விளையாட்டில் தென்னாப்பிரிக்கா minnows என்று சொல்லப்படும் கத்துக்குட்டிதான் என்றாலும் மைதானத்தில் குவிந்திருக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை ஆச்சரியமூட்டுகிறது. (அவர்களெல்லாம் ஐபிஎல்-ஐ விட கால்பந்துக்குத்தான் முக்கியத்துவம் தருகிறார்கள்)

இந்த முறை ஆர்ஜென்டினா, பிரேசில் இடையேதான் இறுதிப்போட்டி இருக்கும் என்பது பெரும்பாலான கால்பந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பு. நடப்புச்சாம்பியன் இத்தாலி ஸ்பெயினிடம் ‘உதை’ வாங்கி காலிறுதியிலேயே வெளியேறிவிடும் என்பது என் எதிர்பார்ப்பு. நமக்கு இருக்கும் ஒரு சாதகமான அம்சம் நாமெல்லாம் இந்தியர்கள். எனவே எந்த அணி ஜெயித்தாலும் தோற்றாலும் டென்ஷன், பிளட்பிரஷர் எல்லாம் இல்லாமல் கூலாக ஆட்டங்களை கண்டுகளிக்கலாம். உங்களுக்கு ஒன்று தெரியுமா..?கடந்த முறை இத்தாலிதான் என் favourite. இறுதியில் அதுவே கோப்பையை வென்றது. இப்போது என் ஓட்டு ஆர்ஜென்டினாவுக்கே. நைஜீரியாவுக்கெதிரான முதல் போட்டியில் அவர்கள் ஆடிய விதமே அசத்தியது. எதிராளியின் சட்டையை பிடித்து இழுப்பது, காலை தட்டி விடுவது போன்ற முரட்டுத்தனமான ஆட்டம் இல்லை. மிகவும் நேர்த்தியாக பந்தை கடத்துவதும், தன் எல்லைக்குள் எதிராளியின் ஆதிக்கத்தைத் தடுப்பதும் என சாமர்த்தியமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். போதாக்குறைக்கு இந்த அணிக்கு பயிற்சியாளர் மாரடோனா. கால்பந்து உலகின் சச்சின். எனவே..இந்த ஆண்டு “அசத்தப்போவது ஆர்ஜென்டினாவே”. என் கணிப்புப்படி பிரேசில், ஆர்ஜென்டினா, ஸ்பெயின் இவற்றோடு நான்காவதாக இங்கிலாந்து அல்லது பிரான்ஸ் அரை இறுதிக்குத் தகுதி பெறலாம். எல்லா போட்டிகளையும் பார்க்க முடிவதில்லை. இரண்டாம் சுற்று ஆட்டங்களில் இருந்து எழுதுகிறேன். நன்றி. – அ. சரவணன்.

Advertisements

3 responses to this post.

  1. எனக்கு ஃபேவரைட்டான டீம் எப்பொழுதும் தோற்கும் என்பதால் நான் எந்த ஃபேவரைட்டயும் வைத்துக்கொள்ளவில்லை. இருந்தாலும் உங்கள் பதிவைப் படித்ததும் அர்ஜண்டினாவின் ரசிகனாக ஆகலாமா என்று தோன்றுகிறது.

    கூடியவிரைவில் ஃபுட்பால் கற்று (விக்கிபீடியாவில்தான்), உங்கள் பதிவு மறுமொழிகளில் கலந்து கொ(ல்)ள்கிறேன்.

  2. Posted by saravananblog on ஜூன் 18, 2010 at 2:07 பிப

    நண்பரே, தாங்கள் கால்பந்து பற்றி அறிந்திராதது யான் செய்த பாக்கியம். பின்னூட்டத்திற்கு நன்றி.

  3. Posted by ஞானப் பிரகாஷ் on ஜூன் 30, 2010 at 9:02 பிப

    என்னதான் கால்பந்து பற்றி ஒரு இடுக்கை எழுதினாலும் அதிலும் கிரிக்கெட்டை புகுத்தி நீங்கள் ஒரு கிரிக்கெட் ரசிகர் என்பதை ……………….??????????

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: