தாக்கரே Vs சச்சின் ; திமுக Vs ரகுமான்

சச்சின் எதற்கு அப்படிப் பேச வேண்டும்?  “நான் ஒரு மகாராஷ்டிரன் என்பதற்காகப் பெருமைப்படுகிறேன். ஆனாலும், முதலில் நான் இந்தியன்” என்பதோடு நிறுத்தியிருக்கலாம்.  ஆனால் தொடர்ந்து, “மும்பை நகரம் இந்தியர் யாவருக்கும் உரியது” என்று உள்குத்தோடு(!) ஏன் சொல்ல வேண்டும். அந்த வரி “மும்பை நகரம் மகாராஷ்டிரர்களுக்கே உரியது” என்று சொல்லி வரும் சிவசேனாக்களையும், நவநிர்மாண்களையும் மறைமுகமாக கிண்டல் செய்வதாகத்தானே அர்த்தம்.

அதனால்தானே பால் தாக்கரே “அரசியல் பேச்சுகள் வேண்டாம்” என்று கண்டிக்கிறார். சச்சின் கூறியது முழுக்க முழுக்க சரியே என்பதில் மாற்றுக்கருத்துகள் இல்லை. ஆனாலும் சர்ச்சைக்குரிய வகையில் ஏன் பேச வேண்டும்? உதாரணத்திற்கு ஏ.ஆர்.ரகுமானை எடுத்துக்கொள்வோம். அவருக்கும் ஆளும் திமுக அரசுக்கும் இடையே கொஞ்சம் பிணக்கு இருப்பது தெரிந்ததே. ஆனாலும் அவர் அரசியல் சம்பந்தமான பேச்சுகளை நாசூக்காக தவிர்த்து விடுவார். ஆஸ்கார் விருது வாங்கியதற்காக அரசு சார்பில் விழா எடுக்கிறோம் என வேண்டாவெறுப்பாக பலநாட்கள் கழித்து ரகுமானுக்கு ஒரு அழைப்பை விடுக்க, அதை அவர் “நேரம் கிடைக்கவில்லை” என சாமர்த்தியமாக தவிர்த்தார். ரகுமானும் சச்சினும் தத்தமது துறைகளில் சிகரத்தைத் தொட்டவர்கள். அவர்களுக்கு அரசியல் தேவையில்லை. இது ரகுமானுக்கு புரிந்திருக்கிறது. சச்சினுக்கும் புரியும்.

அதுசரி… பால் தாக்கரே, ராஜ் தாக்கரே போன்றோர் இன உணர்வை வைத்து அரசியல் செய்வது சரியா என்ற கேள்வி வரும். சரிதான் என்று என் நண்பர்கள் சிலரும் சொல்கிறார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை அவர்களின் பேச்சுகள் ஒதுக்கப்பட வேண்டியவை.

தமிழகத்தில் மற்ற மாநில மக்கள் வந்து வேலை செய்வதைக் கண்டு நாம் கோபம் கொள்வதில்லை. (கோபம் கொள்ளக்கூடாது) மாறாக, பெருமை கொள்கிறோம். “எங்கள் பூமி உங்களை வாழவைக்கிறது, வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்” என்று பெருமையோடு சொல்லுவோம். அந்தப் பரந்த மனப்பான்மை தாக்கரேக்களிடம்  இல்லை என்பதுதான் பிரச்சினை.  “வாழு, வாழ விடு”.

Advertisements

4 responses to this post.

 1. Posted by க்ருபா on நவம்பர் 19, 2009 at 2:54 பிப

  அரசியல்வாதிகள் பேசுவதை எல்லாம் அரசியல் செய்வதாக முத்திரை குத்திவிட்டால் என்ன சொல்வது ஐயா?

  “தமிழகத்தில் மற்ற மாநில மக்கள் வந்து வேலை செய்வதைக் கண்டு நாம் கோபம் கொள்வதில்லை” என்பது ஐ.டி. துறைக்கு வேண்டுமானால் பொருந்து வரலாம் ஐயா. ஏனெனில், மற்ற மாநில மக்கள் ஐ.டி. துறைக்கு வந்ததால் எந்த தமிழனுக்கும் வேலை கிடைத்துவிடாமல் போகவில்லை.

  ஆனால் திரைத்துறை (“மும்பை” நடிகைகள்), நிதித்துறை (அடக்குக்கடை மார்வாடிகளையும் சேர்த்து) போன்ற துறைகளில் எல்லாம் தமிழனின் ‘தமிழ்ப்பற்று’ உலகறிந்ததுதானே ஐயா…? எத்தனையெத்தனை விதமாக விமர்சிக்கப்பட்டிருக்கிறார்கள்! எத்தனை பேர் பெருமை கொண்டோம்?

  அப்புறம் அனுமானத்தின் அடிப்படையில் அர்த்தம் கொள்வதைத் தவிர்க்கவும்.

 2. Please, Tehy are not in equal stature. Dont try to equate ARR with Sachin. You are comparing a mountain with a molehill. We all know why AR was given the oscar. Would you call Obama a greatest peace lover because he got a nobel? Come on!

 3. நன்றி ஐயா. “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பது தமிழனின் பண்புதானே ஐயா. (அல்லது அப்படி நம்பவாவது செய்யுங்கள் ஐயா). தமிழனை தமிழனே பாராட்டாவிட்டால் எப்படி ஐயா?
  எப்படியிருப்பினும், மிக்க நன்றி க்ருபா. தங்களின் கருத்துகள் என்னை மேலும் செம்மைப்படுத்தும்.

 4. தங்கள் வருகைக்கு நன்றி திரு.அழகன். A.R. ரகுமான் மீது உங்களுக்கு ஏதோ “காண்டு” போலும். இருக்கட்டும். அவரை எப்போதும் மேஸ்ட்ரோ இளையராஜாவோடு ஒப்பிட்டு குறை சொல்வது நம் வழக்கமாகிவிட்டது. என்ன செய்ய..! ரகுமானுக்கு கிடைத்த வாய்ப்புகள்…தேசிய, சர்வதேச தொடர்புகள் ராஜாவிற்கு கிடைக்கவில்லை அல்லது கிடைத்ததை பயன்படுத்திக்கொள்ளவில்லை. ஆஸ்கார் விருது பெற்றதில் ஏதோ “உள்நோக்கம்” இருப்பதாய் நீங்கள் சந்தேகித்தாலும், அதுதவிர்த்து இன்னும் பலப்பல விருதுகளைக் குவிக்கிறாரே.. அதன் ரகசியம் என்ன. அவர் இன்னும் பெறாதது.. இசையின் ஆஸ்கார் “கிராமி” விருதுதான். வாழ்த்துவோம். அதையும் விரைவில் பெறுவார். மற்றபடி நானும் உங்களைப்போல சச்சின் ரசிகன்தான். நன்றி அழகன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: