Bachelor-கள் weekend-ல் என்ன செய்கிறார்கள்?

 Bachelor- களில் கிட்டத்தட்ட 90 விழுக்காடு பேர் விடுமுறை நாள் என்றால் காலை 10 மணிக்கே துயில் எழுவார்கள், அதுவும் பசி வயிற்றைக் கிள்ளும் என்பதால். (பசியையும் அடக்கிக்கொண்டு 12 மணிவரை தூங்கும் சில ஜெகஜாலக் கில்லாடிகளும் உண்டு). அப்படி இப்படி ஒருவழியாக சோம்பல் முறித்து பல் துலக்கி,  கடைக்கு சென்று டீ/காபி சாப்பிட்டு அந்த எஃப்பெக்டில் கக்கா சென்று பின் குளிக்கலாமா வேண்டாமா என்று டாஸ் போட்டுப் பார்த்து (அது எப்படிங்க எப்பவும் டாஸ்ல ‘வேண்டாம்’னே வருது)… இதெல்லாம் முடிக்கறதுக்கே பதினொன்னு, பதினொன்னரை ஆயிடும். அதுக்கப்புறம் ஒரு வழியா கையேந்தி பவன் போனா அங்க டேபிள், சேரை கவுத்துப் போட்டுட்டு உக்காந்து மத்தியான சாப்பாட்டுக்கு வெங்காயம் அறிஞ்சிட்டு இருப்பாங்க .  ஹும்.. அப்படியே நடந்து நம்ம நாயர் டீக்கடையில மறுபடியும் ஒரு டீயும், பிஸ்கட்டும் சாப்பிட்டுட்டு (இப்ப எந்த எஃப்பெக்டும் தராதான்னு கேக்காதீங்க) வீடு வந்து சேர்ந்தா மணி 12. கொஞ்ச நேரம் நம்ப தினமலரையும், தினத்தந்தியையும் புரட்டி எடுத்துட்டு வாரமலர் கிசு கிசு, குறுக்கெழுத்து.. இன்ன பிற syllabus முழுக்க கவர் பண்ணி முடிச்சா…. ஆச்சு லஞ்ச் டைம்.  நல்லா மூக்கு பிடிக்க சாப்பிட்டுட்டு ஒரு தூக்கத்தைப் போட்டா 6 மணிக்குத்தான் முழிப்பே வரும். அப்புறமா போய் நாயர் கடையில ஒரு டீயும், (தம் அடிக்கிறவங்க தம்மும்) போட்டுட்டு “அப்புறம் மாப்ள.. எங்க போலாம்…”-ன்னு டயலாக்க போட்டா, “போர் அடிக்குதுடா.. வா பாண்டி பஜார் போகலாம்”-னுவான். ரயிலப் பிடிச்சு மாம்பலம் போய், ரெங்கநாதன் தெருவுல நீந்தி, உஸ்மான் ரோடு வழியா பாண்டி பஜார் போய்.. ஒரு பஞ்சாபி குல்பிய வாங்கி வாயில வச்சுக்கிட்டு ஒரு மணிநேரம் தேமேன்னு சுத்திட்டு ரிடர்ன் அடிப்போம். நைட்டு கையேந்தி பவன் போய் பரோட்டா சாப்டுட்டு வீடு வந்து சேர்ந்தா ஆச்சு மணி 11. “அச்சச்சோ… துணி துவைக்கலையே…”. அடிச்சு புடிச்சு துணியெல்லாம் ஊர வச்சுட்டு சிஸ்டத்துல ஒரு படத்த போட்டு உக்காந்துருவோம். படத்த ஓட்டி ஒட்டி பாத்துட்டு, மூச்சு வாங்கத் துணி துவைத்து முடிச்சா மணி நள்ளிரவு 2 மணி. ஆவ்வ்..  Ok. Goodnight.

One response to this post.

  1. >பசியையும் அடக்கிக்கொண்டு 12 மணிவரை தூங்கும் சில ஜெகஜாலக் கில்லாடிகளும் உண்டு

    ஆனாலும் இவ்வளவு தற்பெருமை கூடாது.

    >சிஸ்டத்துல ஒரு படத்த போட்டு உக்காந்துருவோம். படத்த ஓட்டி ஒட்டி பாத்துட்டு,

    ”கணிப்பொறி” = சிஸ்டம்னு நம்பறேன். கூடிய சீக்கரம் இணைய இணைப்பையும் வாங்க வாழ்த்துகள்.

    4 மணி நேரம் துணி துவைக்கும் தொழில்நேர்த்தியைப் பார்த்தால், நிச்சயம் நல்ல உழைப்பாளி என்று தெரிகிறது.

    para paraவாகப் பிரித்து எழுதினால் படிக்க இன்னும் வசதியாக இருக்கும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: