வரவேற்கிறது வாழை. (mentors தேவை)

சாப்ட்வேர் துறையில் உள்ளவர்கள் weekend ஆனால் ECR, Pub, டிஸ்கொதே என்று ஊர் சுற்றுகிறார்கள். நம் கலாச்சாரத்தையே கெடுக்கிறார்கள் என்று குற்றம் சாட்டும் கும்பல் நிறையவே இருக்கிறது. ஆனால் உண்மையில் சாப்ட்வேரில் இருப்பவர்கள் வார விடுமுறை நாட்களில் என்ன செய்கிறார்கள்?

நாங்கள் (பெரும்பாலும்) சாப்ட்வேர் துறையைச் சேர்ந்த நண்பர்கள் ஒன்றிணைந்து “வாழை” என்ற அமைப்பின் மூலம், கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில் உள்ள கிராமங்களுக்கு சென்று வறுமைக் கோட்டுக் கீழ் உள்ள, படிக்க ஆர்வமிருந்தும் வாய்ப்பில்லாத, முதல் தலைமுறையாகக் கல்வி கற்கும் மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு அந்த ஆண்டு முழுவதும் ஒரு வழிகாட்டியாக இருக்கிறோம். இதற்காக நாங்கள் ஒதுக்குவது வருடத்திற்கு வெறும் 12 நாட்களே. (6 weekends) மற்றபடி கடிதம் மூலமும்,  தொலைபேசி மூலமும் அவர்களுக்கு ஆண்டுமுழுவதும் வழிகாட்டுகிறோம். இதுவரை தருமபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனந்தபுரம் பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயனடைந்துள்ளர்கள். கடந்த நான்காண்டுகளாகத் தொடரும் இந்த சேவை இதனைப் படிக்கும் உங்களைப் போன்ற துடிப்புள்ள இளைஞர்கள் மூலம் வாழையடி வாழையாகத் தொடரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு நிறையவே உள்ளது. 

(1:1) ஒரு மாணவருக்கு (ward) ஒரு வழிகாட்டி (mentor) என்ற அடிப்படையில் சுமார் 70 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.
இப்போது பிரச்சினை என்னவென்றால், இதில் கிட்டத்தட்ட 30 பேர் மட்டுமே மாணவிகள். (Lady wards). அவர்களுக்கும் கூட 1:1 என்ற விகிதத்தில் mentors இல்லை. சுமார் 12 Lady mentors மட்டுமே தற்போது வாழையில் active-ஆக உள்ளனர். ஒருவரே இரண்டு, மூன்று மாணவியருக்கு அந்த ஆண்டு முழுவதும் வழிகாட்டுவது என்பது, பணியில் இருக்கும் mentorகளுக்கு சிரமமான விஷயம்தான். எனவே கல்விச் சேவையில் ஆர்வமுள்ள Lady mentors அன்புடன் வரவேற்கப்படுகிறார்கள். “அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், அன்ன யாவினும் புண்ணியம் கோடி, ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்” என்பது பாரதியின் வாக்கு. ஏழை மட்டுமல்ல, வழிகாட்ட யாருமின்றி குடும்பத்தில் முதல் தலைமுறையாகக் கல்வி கற்கும் மாணவ மாணவியருக்கு வழிகாட்ட நாம் இருக்கிறோம் என்றால் அதை விட ஆத்ம திருப்தி வேறு ஏது? இங்கே கற்பிக்க மட்டுமல்ல.. கற்றுக் கொள்ளவும் நிறைய இருக்கிறது. 

 மேலும் விவரங்களுக்கு: www.vazhai.org

Check http://www.youtube.com/watch?v=xTl6MJTzWlY

Points to be noted on vazhai’s activities:

  1. வாழையானது பணமாகவோ, பொருளாகவோ எந்த உதவியும் ward-களுக்கு செய்வதில்லை.
  2. ஏற்கனவே 100க்கு 90 எடுக்கும் மாணவர்களாகப் பார்த்து தேர்ந்தெடுத்து, அவனை 100 க்கு 100 எடுக்க வைக்கும் “சாதனைகளை” செய்யப் போவதில்லை.
  3. பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கியிருக்கும் அவர்களின் குடும்பங்களை உடனே முன்னுக்கு கொண்டுவர வேண்டும் என்ற பெரிய லட்சியங்களோடு எல்லாம் செயல்படுவதில்லை.

வாழையின் இலக்கு மிகவும் எளிதானது. எப்படியோ தட்டுத் தடுமாறி, யார் யாரோ நமக்கு உதவியோ, உதவாமலோ ஒரு வழியாக கல்வியின் மூலம் நாம் இன்று  நல்ல வேலையில் இருக்கிறோம். அதற்கு ஒரு நன்றிக் கடனாக கல்வியும் உதவியும் முறைப்படி கிட்டாத முகம் தெரியா மனிதர்களுக்கு வழிகாட்டுவோம். அதிலும் ஆனந்தம் கொள்வோம்.

நீங்களும் ஆர்வமாக இருப்பின் தயவுசெய்து தொடர்பு கொள்ளவும்.

நன்றியுடனும் நம்பிக்கையுடனும்,
அ. சரவணன்.

5 responses to this post.

  1. வாழை வளர வாழ்த்துக்கள். நல்ல முயற்சி…

  2. Posted by செந்தழல் ரவி on ஓகஸ்ட் 6, 2010 at 6:22 பிப

    நல்ல முயற்சி. இதுவரை செய்தமைக்கும் வாழ்த்துக்கள் !!! நான் என்னுடைய தோழர்களை / தோழிகளை இணைத்துவிடுகிறேன்.

  3. மிக்க நன்றி திரு. மதுரை சரவணன். தங்களின் வலைப்பூவைப் பார்த்தேன். கல்விக்கான சிறப்பு வலையாகவே அதை அற்புதமாக நெய்திருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி! தங்களைப் போல கல்வியில் ஆர்வமுள்ள இளைஞர்கள் வாழைக்கு வந்தால் மாணவர்களுக்கு அது பெரும்பாக்கியம். தாங்கள் தற்போது இருப்பது சென்னையிலா..? மதுரையிலா..?

  4. நன்றி திரு. ரவி அவர்களே..! உங்களின் வார்த்தைகள் எங்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கிறது. சென்னையிலோ அல்லது பெங்களூரிலோ தங்களின் நண்பர்கள் இருப்பின் http://www.vazhai.org/support.aspx -ல் தொடர்பு கொண்டு அவர்களை இணைத்துக் கொள்ளுமாறு தெரியப்படுத்துங்கள். நன்றி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: