பிள்ளையார் சுழி

உ.

மேற்கண்டது (உ) பிள்ளையார் சுழி என்று வைத்துக் கொள்ளவும். கணினியில் என்னால் பிள்ளையார் சுழியை இப்படித்தான் போட முடியும். இது என்னுடைய முதல் படைப்பு. எனவேதான் பிள்ளையார் சுழிக்கு விசை பலகையில் ஏதேனும் வழி இருக்கிறதா என்று தேடிப் பார்த்தேன். சரி.. இந்த keyboard -ஐ கண்டுபிடித்தவனுக்கு பிள்ளையார் சுழிதான் தெரியாது. atleast + (சிலுவையாவது) கொடுத்திருக்கலாம்.

போகட்டும் விடுங்கள்.  ஏதோ நானும் சுழியைப் போட்டு ஆரம்பித்து விட்டேன். ஆனால் எழுதுவதற்குத்தான் ஒரு வழியும் இல்லை. சரி.. இதையே கேட்போம். இந்த பிள்ளையார் சுழி போடும் பழக்கம் எப்படி வந்தது? (கி.மு பதினெட்டாம் நூற்றாண்டில்…… போன்ற கதையெல்லாம் வேண்டாம்).  முழுமுதற் கடவுள் பிள்ளையார் தெரியும். ஆனால் இந்த சுழியை எங்கிருந்து பிடித்தார்கள். எனக்கு தெரிந்த சுழி எல்லாம் என் தலையில் இருக்கும் சில வணங்காமுடிகள்தாம்!

 

என்றும் அன்புடன்,
சரவணன்.

3 responses to this post.

  1. நல்லா படிக்காத பசங்க வாங்கற சுழியைப் பத்தி உங்களுக்குத் தெரிஞ்சுருக்க வாய்ப்பில்லை. சுழிலேர்ந்து ஆரம்பிச்சு முன்னாடி ஒன்னும் பின்னாடி ஒரு சுழியும் போட்ட மதிப்பெண் வாங்கறதுதான் லட்சியம். சுழில ஆரம்பிச்சு சுழில வாழ்க்கை முடியும். சரி சரி, தத்துவ மொக்கை போதும்.

    ‘உ’ கொஞ்சம் கஷ்டமான எழுத்து, ஆணியில் எழுதறதுக்கு. அதுவே சரியா வந்தா,மிச்ச எல்லாம் ரொம்பவும் சரியா வரும். பனை ஓலைல இதை எழுதிப்பார்த்து ஓலை கிழியாட்டி மிச்சதையும் எழுதிக்கலாம்ல? அதான்(ன்னு நெனைக்கறேன்).

    வலையுலகத்திற்கு வருக, வருக.

  2. வாழ்த்துகள் நீங்களும் ஆரம்பித்து விட்டீர்கல். என்ன கொடுமை சரவணா .ஆண்டவா எங்களை காப்பாற்று

  3. Mikka nanri ayya

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: